Print this page

இருளில் தவிக்க உள்ள இலங்கை

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இன்று (24) இரவு மற்றும் நாளை (25) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 05.45 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு மணி நேரமும், நாளை பிற்பகல் 01.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை இரண்டு மணி நேரமும் மின்சாரம் தடைப்படும் என அதன் "குழு உறுப்பினர் எரங்க குடஹேவா" தெரிவித்துள்ளார்.

தற்போது சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம் எரிபொருள் தட்டுப்பாட்டினால் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

மேலும், பாச் மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்னும் 7 மணித்தியாலங்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களில் எங்களுக்கு டீசல் கிடைக்கவில்லை என்றால், மின்வெட்டு மூன்று மணிநேரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.