Print this page

கல்பிட்டியில் கரையொதிங்கிய அடையாளம் தெரியாத சடலம்

புத்தளம் கல்பிட்டி கந்தகுளி குடா கடற்கரையில் ஆணா அல்லது பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலையில் பழுதடைந்த சடலம் இன்று அதிகாலை கரையொதிங்கி காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 5 அடி உயரமான இந்த சடலத்தின் தலை மணலில் புதையுண்ட நிலையில் கரையொதிங்கியுள்ளது.

சடலத்தின் தோல் மற்றும் சதை என்பன கரைந்துள்ளதால், சடலம் ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்பதை பரிசோதனை செய்யாது கூற முடியாது என கல்பிட்டி பொலிஸார் கூறியுள்ளனர்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.