Print this page

அரசியல்வாதிகளின் கருத்துக்கு அடிபணியாது பெற்றோர்கள் போராட்டம்

வவுனியா ஶ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்திற்கு ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்பாட்டம்!
வவுனியா ஶ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்திற்கு ஆளுமையுள்ள அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி பெற்றோரால் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தபோது...
எமது பாடசாலையில் கடமையில் இருந்த அதிபர் கடந்த மூன்றுமாதங்களுக்கு முன்பாக இடமாற்றலாகிச்சென்றிருந்தார்.
தற்போது புதியஅதிபர் ஒருவர் கடந்த 5ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார்.அவரது நியமனத்திற்கு எதிராக பெற்றோர்களாகிய நாம் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன்,வலயக்கல்வி பணிப்பாளருடனும் இது தொடர்பாக கலந்துரையாடியிருந்தோம். எனினும் நேற்றயதினம் எமக்கு தெரியாமல் சிலருடன் வருகைதந்த குறித்த அதிபர் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
குறித்தஅதிபர் 35 பிள்ளைகளைகொண்ட பாடசாலை ஒன்றையே இதுவரை நிர்வகித்து வந்தார். ஆனால் எமது பாடசாலையில் 480ற்கும் மேற்ப்பட்ட பிள்ளைகள் கல்விகற்று வருகின்றனர். எனவே எமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி ஆளுமையுள்ள அதிபர் ஒருவரை நியமிக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
கல்வித்திணைக்கள அதிகாரிகள் பெற்றோர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து அரசியல் தலையீடுகளை தவிர்த்து தீர்மானங்களை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கல்வித்திணைக்களமே அரசியல்வாதிகளின் கருத்துக்களிற்கு அடிபணியாதே, பிள்ளைகளின் எதிர்காலத்தை நாசமாக்காதே, பெற்றோரின் கோரிக்கைக்கு காது குடு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
May be an image of 10 people, people standing and outdoors