Print this page

இவ்வருட இறுதியில் நாட்டில் ஆட்சி மாற்றம்! வெளியானது பகீர் தகவல்!!

 

நாட்டில் இவ்வருட இறுதிக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆரூடம் வௌியிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்கும் விடயம் குறித்து ஆரூடம் வெளியிட்டார்.

ஆகஸ்ட் மாதம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 50 பேர் எதிர்கட்சியில் அமர்வர் எனவும் அதன்பின் பெரும்பான்மை விருப்பத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்றும் மரிக்கார் கூறியுள்ளார்.