Print this page

மீண்டும் அபாயம்! மற்றுமொரு இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா

அரசாங்கத்தின் மற்றுமொரு இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இவ்வாறு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.