Print this page

அநுர மீது முட்டை வீசி தாக்குதல் நடத்த வெறும் 5000 ரூபாவே கூலி!

மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவின் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்த சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வெறும் 5000 ரூபாவே கூலியாக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவர் பொலிஸாரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரே இவ்வாறு முட்டை வீசி தாக்குதல் நடத்த 5000 ரூபா கொடுத்ததாக சந்தேகநபர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் கம்பஹா மாவட்ட பிரபல அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட போதும் அந்த அமைச்சர் அதனை முற்றாக நிராகரித்துள்ளார்.

Last modified on Monday, 31 January 2022 06:37