Print this page

தலைசுற்ற வைக்கும் நாட்டின் இன்றைய கொரோனா தொற்று மற்றும் மரணம்!

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 1,082 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் வௌிநாட்டில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (30) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,441 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ் இரண்டு பெண்களும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 5 பேரும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 14 பேரும் உள்ளடங்குவர்.