Print this page

21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அதிரடி கைது

February 01, 2022

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கச்சத்தீவு அருகே இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாகை மாவட்டத்தைத் சேர்த்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே,சில வாரங்களுக்கு முன்னதாக 40 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.இதனைத் தொடர்ந்து.அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தார்கள்.

அதே சமயம்,இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும், மத்திய அரசுக்கு கடிதம் மூலம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.