Print this page

நாடு மீண்டும் இருளிலா? முக்கிய அனல்மின் நிலையம் திடீர் செயலிழப்பு!

February 01, 2022

 

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி மீண்டும் பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி முதல் செயலிழந்திருந்த குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு, நேற்றைய தினம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேற்படி மின் பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனால் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.