Print this page

வன் சொட் ரஞ்சனுக்கு 4ம் திகதி சுதந்திர தினத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!

February 02, 2022


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சுதந்திர தினத்தில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் ரஞ்சனின் பெயரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரஞ்சன் ராமநாயக்கவும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். 4ம் திகதி காலை 11 மணிக்கு ரஞ்சனை வரவேற்க வெலிக்கடை சிறைக்கு முன் வருமாறு அந்த பதிவில் உள்ளது.