Print this page

அரிசி, சீமெந்துக்கு பாகிஸ்தானிடம் கடன் கேட்கும் இலங்கை!

February 04, 2022

200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை தயாராகி வருகிறது.

 இந்த கடன் தொகை பாகிஸ்தானில் இருந்து அரிசி மற்றும் சிமெண்ட் இறக்குமதி செய்ய பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 நாட்டில் தற்போது நிலவும் சீமெந்து தட்டுப்பாடு காரணமாக கட்டுமான தொழில் நலிவடைந்து வரும் நிலையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.