Print this page

ரஞ்சனை பார்க்க வெலிக்கடைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர்!

February 05, 2022

 

 

"ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டிருப்பது மோசடியாகவோ அல்லது பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தவராகவோஅல்ல அவர் ஒரு அரசியல் கைதியாக இருப்பதனால் அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்காதது ஏன் " என்ற கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்று (05) வெலிக்கடை சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்திக்கச் சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி எதிர்காலத்தில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காகவும் அவரது மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்