Print this page

ஹிஸ்புல்லாவை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

February 07, 2022

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குமாறு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (7) உத்தரவிட்டுள்ளது.

மேலும், சிலாபம் மேல் நீதிமன்றத்துக்கும் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் பிணை கோரிய மீள்திருத்த விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தளம் மத்ரஸா பாடசாலையில் மாணவர்களுக்காக நிகழ்த்தப்பட்ட பிரசங்கம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

18 மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்த பின்னர், சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் இரண்டு ஜாமீன் கோரிக்கைகள் முன்னர் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

Last modified on Monday, 07 February 2022 05:24