Print this page

காதலுக்கு எதிர்ப்பு! 17 வயது சிறுமி தற்கொலை, கவலையில் தந்தையும் தற்கொலை

February 10, 2022

 

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டதையடுத்து சிறுமியின் தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் ஆகிய இருவருமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துவருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வீட்டில் நஞ்சு அருந்தி சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை தற்கொலைக்கு காரணம் தனது செயற்பாடு என்று அயலவர்கள் பேசத்தொடங்கியதால் சிறுமியின் தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.