Print this page

பப்படத்துக்கான வரி அதிகரிப்பு

உள்நாட்டு விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் பப்படத்துக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவையில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்னறது.

இது தொடர்பில் வாழ்க்கைச்செலவு கட்டுப்பாட்டு குழு அடுத்த வாரம் கூடி ஆராய்ந்த பின்னர் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் -சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

இறக்குமதி செய்யப்படும் பப்படத்துக்கு மிகவும் குறைவான வரியே அறிவிடப்படுவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.