Print this page

உக்ரைனில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

February 24, 2022

உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. உக்ரேனில் வசிக்கும் பதினான்கு மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் அவர்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது.

உக்ரேனில் உள்ள பதினான்கு இலங்கை மாணவர்களில் ஆறு பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், அதே நேரத்தில் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் மீதமுள்ள எட்டு மாணவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறது.

உக்ரேனில் உள்ள அனைத்து இலங்கையர்களும் அவதானமாக இருக்குமாறும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது உக்ரேனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் அனைத்து இலங்கையர்களுக்கும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு.