Print this page

14 வயது சிறுமி கர்ப்பம், ஆபாச படம் பார்த்து தெரியாமல் செய்ததாக தகவல்!

February 25, 2022

14 வயது சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாகிய சம்பவமும் சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. 

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது, 

குறித்த மாணவிக்கு இணையவழி கல்விக்காக பெற்றோர் வழங்கிய கையடக்கத் தொலைபேசியில் இருந்து இணையத்தில் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தனக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, முல்லேரியா வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்று முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியும், இதற்கு காரணமான சிறுவனும் ஒரே பாடசாலையில் 10ஆம் மற்றும் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும், நவகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்களாவர்.

மாணவனின் பெற்றோர்கள் சில மாதங்களுக்கு முன் கல்வி நடவடிக்கைகளுக்காக 27,000 கொடுத்து கையடக்கத்தொலைபேசியை வாங்கிக் கொடுத்துள்ளனர். 

அந்த தொலைபேசியில் இருந்து தான் இணையத்திற்கு பிரவேசித்து ஆபாச காணொளிகளை பார்வையிட்டதாகவும், குறித்த மாணவியிடம் அவ்வாறான முறையில் நடந்து கொண்டதாகவும் சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.

யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இருவருக்குமே தாங்கள் செய்த செயலின் தீவிரம் தெரியவில்லை என்பது விசாரணைகளின் போது தெரியவந்ததாக சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுமியும் சிறுவனும் இவ்வாறு நடந்து கொண்ட போதிலும், இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாக தெரியவரவில்லை.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக உள்ளதேன தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 வயது மாணவன் கடுவல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.