Print this page

பாதுகாப்பு செயலருடன் ஐ.நா. குழு சந்திப்பு

பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோவை அவரது செயலகத்தில் ஐ.நா குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

ஐ.நா அமைதிகாப்புப் படையின் பொலிஸ் தெரிவு மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் தலைவர் அடா யெனிகுன் தலைமையிலான ஐ.நா அதிகாரிகள் குழு இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது ஐ.நா அமைதிப்படையில் இலங்கை படையினர் மற்றும் பொலிஸாரை உள்ளீர்ப்பது தொடர்பாக நிலவும் தடைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.