Print this page

ஜனாதிபதி அமைச்சரவையில் மேற்கொண்ட புதிய மாற்றம்

அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக C.B. ரத்நாயக்க, திலும் அமுனுகம மற்றும் இராஜாங்க அமைச்சராக விமலவீர திசாநாயக்க ஆகியோர் இன்று ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்றது. C.B. ரத்நாயக்க, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக விமலவீர திசாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவியை இராஜினாமா செய்த அருந்திக பெர்னாண்டோ இதற்கு முன்னர் வகித்த, தெங்கு, கித்துள் மற்றும் பனை ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.