Print this page

7000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை நுகர்வுக்கு விநியோகம்

இரண்டு கப்பல்களில் அடங்கியுள்ள 7000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று காலை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கெரவலப்பிட்டிய – ஹெந்தல கடற்கரையில் நங்கூரமிடப்பட்டிருந்த எரிவாயுவை ஏற்றிய கப்பல், கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் விடுவிக்கப்படாமல் இருந்தது.

எவ்வாறாயினும், தற்போது அந்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் கூறியுள்ளார்