Print this page

எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலகிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கம்

நேற்று (15) நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் இணைச் செயலாளர் டி.வி.எஸ்.சில்வா தெரிவித்துள்ளார்.