Print this page

மின் கட்டணமும் அதிகரிக்கிறது

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்க மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் மின்சக்தி அமைச்சில் (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டதுடன், இன்றைய கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.