Print this page

எரிபொருள் வரிசையில் இரண்டாவது மரணமும் பதிவு!

கடவத்தை எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருள் கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார், இவர் முச்சக்கர வண்டி சாரதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நிலையத்தில் காத்திருந்த அவர், தவறிவிழுந்து மயங்கிமடைந்ததாகவும், உடனடியாக அவர்  ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த 71 வயதான முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில், இது இரண்டாவது மரணம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.