Print this page

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டத்தை தொடர்ந்து ரத்தான மகிந்தவின் கந்தரோடை விகாரை பயணம்

கந்தரோடை விகாரைக்கு செல்ல திட்டமிட்டிருந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச அப்பயணத்தை திடீரென ரத்து செய்தார். யாழ்ப்பாணத்திற்கு சென்ற இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச, நயினா தீவுப்பகுதியில் உள்ள விகாரைகளில் வழிபாடு நடத்தினார்.

அங்குள்ள நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்ற மகிந்த ராஜபட்ச, வழிபாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்து, கந்தரோடை விகாரைக்கு செல்ல திட்டமிட்டிருந்த அவர், திடீரென அதனை ரத்து செய்தார்.

கந்தரோடை விகாரையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக செய்தி வெளியான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Last modified on Sunday, 20 March 2022 09:30