Print this page

இலங்கைக்கு 2000 தொன் அரிசியை வழங்க சீனா தீர்மானம் கடனாகவா ? நன்கொடையாகவா ?

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலங்காலமாக இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவளித்து வருவதால் சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

Last modified on Saturday, 26 March 2022 06:11