Print this page

வரிசையில் நிற்பவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை - அரசாங்கம் அறிவிப்பு

டீசல் பெற்றுக் கொள்வதற்காக இன்று (30) மற்றும் நாளை (31) திகதிகளில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திட்டமிட்டவாறு 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் வந்த கப்பலில் இருந்து டீசலை இறக்கமுடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.