Print this page

மின் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை

பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, மின்கட்டணத்தை செலுத்தாத வீடுகளின் பட்டியலை சேகரித்து அந்த நபர்களின் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல வீடுகளில் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.