Print this page

நாமல் குமாரவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் படுகொலை சதித்திட்டம் தொடர்பில் தகவல் வெளிப்படுத்திய நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு வழங்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.