Print this page

இலங்கையில் அரபு வசந்தம் வன்முறை - ஜனாதிபதி தரப்பின் குற்றச்சாட்டு

நேற்றிரவு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாத குழு ஒன்று இருந்தமை தெரியவந்துள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் அரபு வசந்தம் ஏற்பட வேண்டும் என்று போராட்டத்திற்கு அவர்கள் தலைமை தாங்கினர்.

குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களைத் தூண்டிவிட்டு நாட்டை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அநாமதேயமாக திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.