Print this page

ஜனாதிபதி கோட்டாபயவின் ஜோதிடரான ஞானாக்காவின் ஆலயம் பொது மக்களால் சுற்றி வளைப்பு

ஜனாதிபதி கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் ஆலயத்தை பொது மக்கள் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஞானாக்கா நடத்தி செல்லும் காளி ஆலயத்தில் ஆன்மிக அமைதி தேடி கோட்டாபய அடிக்கடி அங்கு சென்று வருவது வழமை.

இந்நிலையில் ஜனாதிபதி ஆலயத்திற்கு வரவுள்ளார் என்ற தகவலின் பேரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சம்பவ இடத்திற்கு ஏராளமான பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அனுராதபுரத்தில் பல எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Last modified on Saturday, 02 April 2022 09:16