Print this page

ரம்புக்கன ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிசார் குறைந்தபட்ச பலத்தையே பிரயோகித்தனர் பொலிஸ் மா அதிபர்

ரம்புக்கனையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸாருக்கு குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் (IGP) C.D விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ரம்புக்கன சம்பவத்தைத் தொடர்ந்து, 30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைப்பதைத் தடுப்பதற்காக பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்ததாக பொலிஸ் மா அதிபர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏற்படக்கூடிய பெரும் சேதங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிசார் அதிக பலத்தை பயன்படுத்தினார்களா என்பதை அறிய பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் கூறினார்