Print this page

நாட்டில் பிரபல அரசியல் தலைவர் உயிரிழந்ததாக பரவிய வதந்தி

நாட்டில் அதிக பிரபலம் வாய்ந்த அரசுத் தலைவர் ஒருவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இந்த பிரமுகர் உயிரிழந்துள்ளதாக நேற்றிரவு முதல் பரவி வரும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தேடுதலில் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்பது உறுதியானது.

குறித்த பிரமுகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று அவரது பேச்சாளர் கூறினார்.