Print this page

மஹிந்தவின் அறிவிப்பால் அரசாங்க எதிர்ப்பாளர்கள் கடும் கொதிப்பில்

இடைக்கால அரசாங்கமொன்று உருவானாலும் தானே பிரதமர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தன்னை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என தெரிவித்துள்ள அவர் என்னுடனோ அல்லது அமைச்சர்களுடனோ பேச்சுவார்த்தைகளிற்கு வராதவரை அவர்கள் போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.