Print this page

மாணவர்கள் மீது தாக்குதல், சபாநாயகரை சுற்றிவளைத்த எதிர்கட்சி எம்பிக்கள்!

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இதனையடுத்து தாக்குதலை நிறுத்துமாறு எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் அலுவலகத்தை சுற்றிவளைத்தனர். 
 
தற்போது தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரவுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
 
பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டு பேருந்துகளை பாராளுமன்ற நுழைவாயிலில் பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.