Print this page

அதிகமான அறிவிட்டால் ஆப்பு

பண்டிகை காலத்தில் அதிக கட்டணங்கள் அறவிடும் பஸ்கள் தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாரச்சி, கோரிக்கை விடுத்துள்ளார்.

பண்டிகை காலத்தின் போது விசேட போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடுவதாக பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த நிலையில், 0117555555 மற்றும் 0771056032 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்டதைவிட அதிக போக்குவரத்து கட்டணங்கள் அறவிடப்படும் பட்சத்தில், குறித்த பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.