Print this page

இந்திய கடன் உதவியின் கீழ் எந்த வாட்டர் கேனான் வாகனமும் இறக்குமதி செய்யப்படவில்லை - இந்திய உயர்ஸ்தானிகராலயம்

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடன்னின் கீழ் இலங்கை அரசாங்கத்தினால் நீர் கேனான் வாகனம் இறக்குமதி செய்யப்படுவதாக வெளியான தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று மறுத்துள்ளது.

“இந்திய அரசாங்கத்தால் நீட்டிக்கப்பட்ட கடன் உதவின் கீழ் இலங்கை அரசாங்கத்தால் நீர் கேனான் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டது என்ற செய்திகளை நாங்கள் பார்த்தோம். இந்த அறிக்கைகள் உண்மையில் தவறானவை. இந்தியா இலங்கைக்கு வழங்கிய எந்தவொரு கடனுதவியின் கீழும் "இந்தியாவினால் நீர் கேனான் வாகனங்கள் வழங்கப்படவில்லை” என உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வழங்குவது தற்போதைய சூழ்நிலையில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்கே , இலங்கை மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இவ்வாறான தவறான அறிக்கைகள் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்காது” என்றும் அது மேலும் கூறியுள்ளது