Print this page

ரணிலுக்கு எந்த விதத்திலும் ஆதரவு வழங்க மாட்டோம் - சஜித் அணி அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின்  பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக தொடர்ந்தும் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாப்பிற்காகவே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.