Print this page

நாட்டில் போதுமான அளவு பெற்றோல், டீசல் இருப்பதாக அரசாங்கம் அறிவிப்பு

நாட்டில் இன்று போதியளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதும் டீசல் மற்றும் பெற்றோல் இறக்கப்பட்டு வருவதாகவும், தரையிறங்குவதற்கு இடமில்லாத காரணத்தினால் பணம் செலுத்திய மற்றொரு கப்பல் கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே பெட்ரோல், டீசல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.

அடுத்த பத்து நாட்களில் மேலும் மூன்று எரிபொருள் தாங்கிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எரிசக்தி அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.