Print this page

21ஐ ஆதரிப்பது குறித்த விமல் அணியின் அறிவிப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சிகள் முன்வைக்கும் திருத்தங்களுக்கு உரிய மதிப்பு கிடைக்குமானால் 21வது திருத்தத்திற்கு அக்கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்த பிரேரணை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் 9 சுயாதீன கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

21வது திருத்தச் சட்ட வரைவை ஆராய்ந்து எமது கருத்துக்களை முன்வைத்துள்ளோம். அதனை ஆதரிக்கும் அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் இறுதி வரைவு தயாரிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் முன்வைக்கும் உரிய திருத்தங்கள் உரிய மதிப்பை பெற்றால் 21ஆவது திருத்தத்தை ஆதரிப்பதற்கு எமது கூட்டணி தீர்மானித்துள்ளது.