Print this page

ஒரு கிலோ அரிசியின் விலை 1000 ரூபாவைத் தாண்டும்

அடுத்த சில மாதங்களுக்குள் இலங்கையில் ஒரு கிலோ அரிசியின் விலை 1000 ரூபாவை தாண்டும் என நீர்ப்பாசன கூட்டு விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் நிலைமைக்கு ஏற்ப பயிர்ச்செய்கைகளுக்கு தேவையான உரங்களை வழங்குவதற்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதன் செயலாளர் புஞ்சிரால ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த உரத்தை பெற்றுக்கொள்ளுமாறும் அல்லது டொலர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் கோரப்படுவதாக தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இரசாயன உரங்களை இரசாயன உரங்களைத் தடை செய்ய ஜனாதிபதி எடுத்த தீர்மானம் விவசாயத்தையும் இதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் முதித பெரேரா தெரிவித்துள்ளார்.