Print this page

ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து வரும் பிரபல முன்னாள் அமைச்சர்கள்

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகிக்காத முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் முந்தைய அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர்களாக இருந்தவர்கள்.

இவர்கள் அனுராதபுரம் மற்றும் மனுவர மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

மேலும் அந்த மாவட்டங்களில்  இளையவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதால் விரக்தியில் உள்ளனர்.

அமைச்சுப் பதவிகள் கிடைக்காத காரணத்தினால் பல இடங்களில் பகிரங்கமாக ஜனாதிபதியை குறிவைத்து விமர்சித்து வருவதாக தெரியவருகின்றது.