Print this page

மக்கள் போராட்டம் ஊடாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி

மக்கள் விடுதலை முன்னணியும், முன்னிலை சோசலிசக் கட்சியும் மீண்டும் இணையத் தயாராகி வருவதாகத் தெரியவந்துள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இணையச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜே.வி.பியும் முன்னிலை சோசலிசக் கட்சியும் மக்கள் போராட்டத்திற்காக ஒன்றிணைவதை பார்ப்பது சமூகத்தில் முற்போக்கான மாற்றத்தை விரும்பும் மக்களின் விருப்பமாகவும் கோரிக்கையாகவும் மாறியுள்ளது என்று அவர் கூறுகிறார்.

அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் தந்திரோபாயங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவுவதாகவும், நாட்டின் தற்போதைய அரசியலமைப்புக்கு அப்பால் சென்று மக்கள் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் நம்பிக்கையில் தமது கட்சி இருப்பதாகவும் குணரட்ணம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் இணையம் ஒன்றுடனான கலந்துரையாடலின் போது பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின்  அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த குமார் குணரட்னம், பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் முன்னிலை சோசலிச கட்சியின் கீழ் இயங்காத அமைப்பாகும் என்றார்.