Print this page

அரசு முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை பராமரிக்க திட்டம் - பிரதமர்

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு ஆதரவளிக்க பிரதமர் ஒப்புக்கொண்டார்.

நாட்டுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 500 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நாடு எதிர்நோக்கும் நெருக்கடியை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் முச்சக்கரவண்டி தொழிற்துறையை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.