முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகையை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஜூன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தங்காலை அன்னப்பிட்டிய வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.