Print this page

எரிபொருள் இறக்குமதிக்கு டொலர் இல்லை, பணம் அச்சிட வேண்டிய நிலை

எதிர்காலத்தில் நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை பெறுவதற்கு மத்திய வங்கிக்கு செலுத்த ரூபாவை அச்சிட வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திற்காக எரிபொருளை இறக்குமதி செய்ய பணம் தேடுவது பெரும் சவாலாக உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

எரிபொருளை செலுத்துவதற்கு மத்திய வங்கி டொலர்களை ஒதுக்கியுள்ள போதிலும், அதனை செலுத்துவதற்கு CPC இன் நஷ்டம் காரணமாக பணத்தை அச்சிடுவதே ஒரே வழி என அவர் கூறுகிறார்.

தற்போது இலங்கைக்கு வரும் நான்கு எரிபொருள் தாங்கிகளுக்கு செலுத்த வேண்டிய 160 மில்லியன் டொலர்களை கண்டுபிடிப்பதே இன்றைய சவாலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் மோசமடையுமென இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் பணம் செலுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கோரிக்கை காரணமாகவே இந்த நிலை ஏற்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.