Print this page

சக்திவாய்ந்த ராஜபக்ச ராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான செய்தி உண்மையா

எந்தவொரு ராஜபக்சவும் மீண்டும் பதவி விலகத் தயாராக இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் வாக்கு மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமக்கு பதவி விலக வேறு நபர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறுகிறார்.

மற்றுமொரு சக்திவாய்ந்த ராஜபக்ச ராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.