Print this page

போயா தினத்தில் விகாரைக்கு சென்ற தாய், மகன், மகள் கடலில் மூழ்கி மாயம்

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற குழுவினர் அங்கிருந்து கடலுக்கு சென்றுள்ளனர். 

காணாமல் போன தாய்க்கு 55 வயது எனவும் அவரது மகனுக்கு 16 வயது எனவும் மருமகனுக்கு 22 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.