Print this page

எரிபொருள் வரிசையில் மற்றும் ஒரு மரணம் பதிவு

எரிபொருளுக்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றொரு நபர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை, வெகட பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 55 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.