Print this page

பெற்றோல், டீசல் விலை பாரிய அளவில் மீண்டும் அதிகரிக்கும்

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் முறைப்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு லீற்றர் எரிபொருளின் விலையும் 100 ரூபாவால் அதிகரிக்கப்படலாம் எனவும் அவர் கூறுகிறார்.