Print this page

எந்த நாட்டிலிருந்தும் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாது- சம்பிக்க

உலகில் மோசமாகப் பழுதடைந்துள்ள இலங்கையின் நன்மதிப்பை மீட்டெடுக்காமல் எந்தவொரு நாட்டிலிருந்தும் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்யவுள்ளதாக நேற்று வெளியான செய்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச அரங்கில் இலங்கை தனது பிம்பத்தை மீட்டெடுக்கும் வரை உலகில் எங்கிருந்தும் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாது. ஊழலால் இமேஜ் கெட்டுவிட்டது என்று அவர் மேலும் கூறினார்